குர்ஆன் 10:62 — ஜோனா
நிச்சயமாக, கடவுள்-ன் கூட்டணியினர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[10:61] நீங்கள் எவற்றைச் செய்யும் பொழுதும் நாம் அவைகளுக்கு சாட்சிகளாக இல்லாமல், நீங்கள் எந்த சூழலுக்குள்ளும் நுழைவதில்லை, அன்றி எந்தக் குர்ஆனையும் நீங்கள் ஓதுவதில்லை, அன்றி எந்த விஷயத்தையும் நீங்கள் செய்வதில்லை. ஓர் அணுவின் எடைகூட உமது இரட்சகரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்டதல்ல, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அன்றி ஏதாவது ஒன்று அணுவை விடச் சிறியதோ, அல்லது பெரியதோ, ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.
[10:63] அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களாக இருக்கின்றனர்.