குர்ஆன் 10:61 — ஜோனா
நீங்கள் எவற்றைச் செய்யும் பொழுதும் நாம் அவைகளுக்கு சாட்சிகளாக இல்லாமல், நீங்கள் எந்த சூழலுக்குள்ளும் நுழைவதில்லை, அன்றி எந்தக் குர்ஆனையும் நீங்கள் ஓதுவதில்லை, அன்றி எந்த விஷயத்தையும் நீங்கள் செய்வதில்லை. ஓர் அணுவின் எடைகூட உமது இரட்சகரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்டதல்ல, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அன்றி ஏதாவது ஒன்று அணுவை விடச் சிறியதோ, அல்லது பெரியதோ, ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.
[10:60] கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக் கட்டுபவர்களுக்கு, மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா? மிக நிச்சயமாக, கடவுள் தன் அருளை மனிதர்கள் மீது பொழிகின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களாக இருக்கின்றனர்.
[10:62] நிச்சயமாக, கடவுள்-ன் கூட்டணியினர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.