Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:60 — ஜோனா

கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக் கட்டுபவர்களுக்கு, மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா? மிக நிச்சயமாக, கடவுள் தன் அருளை மனிதர்கள் மீது பொழிகின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களாக இருக்கின்றனர்.

[10:59] “கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற் றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கபட்டதாக வும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்ட தாகவும் ஆக்கிக்கொள்கின்றீர்கள் என்பதை யும் நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களா?” என்று கூறுவீராக. “இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளாரா? அல்லது, நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக.

[10:61] நீங்கள் எவற்றைச் செய்யும் பொழுதும் நாம் அவைகளுக்கு சாட்சிகளாக இல்லாமல், நீங்கள் எந்த சூழலுக்குள்ளும் நுழைவதில்லை, அன்றி எந்தக் குர்ஆனையும் நீங்கள் ஓதுவதில்லை, அன்றி எந்த விஷயத்தையும் நீங்கள் செய்வதில்லை. ஓர் அணுவின் எடைகூட உமது இரட்சகரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்டதல்ல, அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும் சரியே. அன்றி ஏதாவது ஒன்று அணுவை விடச் சிறியதோ, அல்லது பெரியதோ, ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.