குர்ஆன் 10:59 — ஜோனா
“கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற் றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கபட்டதாக வும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்ட தாகவும் ஆக்கிக்கொள்கின்றீர்கள் என்பதை யும் நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களா?” என்று கூறுவீராக. “இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளாரா? அல்லது, நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக.
[10:58] “கடவுள்-ன் அருளைக் கொண்டும் மேலும் அவருடைய கருணையைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்” என்று கூறுவீராக. அவர்களால் சேகரிக்க முடிந்த எந்தச் செல்வத்தையும் விட இது மிகவும் மேலானது.
[10:60] கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக் கட்டுபவர்களுக்கு, மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று எப்பொழுதாவது தோன்றுகின்றதா? மிக நிச்சயமாக, கடவுள் தன் அருளை மனிதர்கள் மீது பொழிகின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றிகெட்டவர்களாக இருக்கின்றனர்.