குர்ஆன் 10:58 — ஜோனா
“கடவுள்-ன் அருளைக் கொண்டும் மேலும் அவருடைய கருணையைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்” என்று கூறுவீராக. அவர்களால் சேகரிக்க முடிந்த எந்தச் செல்வத்தையும் விட இது மிகவும் மேலானது.
[10:57] மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இதிலே ஞான உபதேசமும், மேலும் உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்த ஒன்றிற்கும் நிவாரணமும், மேலும் வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையும் வந்துள்ளது.
[10:59] “கடவுள் எவ்வாறு எல்லாவிதமான வாழ்வாதாரங்களையும் உங்களுக்கு இறக்கி அனுப்புகின்றார் என்பதையும், பின்னர் அவற் றில் சிலவற்றை நீங்கள் அனுமதிக்கபட்டதாக வும், மேலும் சிலவற்றை தடை செய்யப்பட்ட தாகவும் ஆக்கிக்கொள்கின்றீர்கள் என்பதை யும் நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களா?” என்று கூறுவீராக. “இதனைச் செய்வதற்குக் கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளாரா? அல்லது, நீங்கள் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மேல் சாட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக.