Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:72 — ஜோனா

“நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுள்-இடமிருந்து வருகின்றது. அடி பணிந்த ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”

[10:71] நோவாவின் சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக் காட்டுவீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றி நான் நினைவூட்டுவதும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாக தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுள்-இடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக் கலந்து உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்து வாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத் துங்கள்.

[10:73] அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர் மேலும், அதன் விளைவாக, நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப் பாற்றினோம்; நாம் அவர்களை வாரிசுகளாக்கி னோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக; அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.