குர்ஆன் 10:74 — ஜோனா
நாம் அவருக்குப் பின்னர் தூதர்களை, அவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், மேலும் அவர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் காட்டினார்கள். ஆனால் அவர்கள், கடந்த காலங்களில் எதை ஏற்க மறுத்து விட்டார்களோ, அதில் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்திருக்கவில்லை. இவ்விதமாக நாம் வரம்பு மீறுபவர்களின் இதயங்களில் முத்திரையிட்டு விடுகின்றோம்.
[10:73] அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர் மேலும், அதன் விளைவாக, நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப் பாற்றினோம்; நாம் அவர்களை வாரிசுகளாக்கி னோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக; அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.
[10:75] அவர்களுக்குப் பின்னர் மோஸஸையும் ஆரோனையும் நமது சான்றுகளுடன், ஃபேரோ விடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் அனுப்பி னோம். ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர் களாக மாறிவிட்டார்கள்; மேலும் வரம்பு மீறும் மக்களாக இருந்தார்கள்.