Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:75 — ஜோனா

அவர்களுக்குப் பின்னர் மோஸஸையும் ஆரோனையும் நமது சான்றுகளுடன், ஃபேரோ விடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் அனுப்பி னோம். ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர் களாக மாறிவிட்டார்கள்; மேலும் வரம்பு மீறும் மக்களாக இருந்தார்கள்.

[10:74] நாம் அவருக்குப் பின்னர் தூதர்களை, அவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், மேலும் அவர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் காட்டினார்கள். ஆனால் அவர்கள், கடந்த காலங்களில் எதை ஏற்க மறுத்து விட்டார்களோ, அதில் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்திருக்கவில்லை. இவ்விதமாக நாம் வரம்பு மீறுபவர்களின் இதயங்களில் முத்திரையிட்டு விடுகின்றோம்.

[10:76] நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்த போது, அவர்கள், “இது தெளிவான மாயாஜாலமாகும்!” என்று கூறினார்கள்.