குர்ஆன் 10:9 — ஜோனா
நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர் களுடைய இரட்சகர், அவர்களுடைய நம்பிக்கை எனும் சீரிய பண்பினால், அவர்களை வழிநடத்துகின்றார். பேரானந்தமான தோட்டங் களில் அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.
[10:8] இவர்கள், தங்களுடைய சொந்தச் செயல்களின் விளைவாக, தங்களுடைய இறுதியான தங்கு மிடமாக நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.
[10:10] அங்கே அவர்களுடைய பிரார்த்தனையானது: “எங்கள் தெய்வமே, நீரே துதிப்பிற்குரியவர்”, அங்கே அவர்களுடைய வாழ்த்தானது, “அமைதி”, மேலும் அவர்களுடைய முடிவான பிரார்த்தனையானது: “பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே புகழ் அனைத்தும்” என்பதாக இருக்கும்.