குர்ஆன் 11:102 — ஹூ
அந்தச் சமூகங்கள் வரம்பு மீறியபோது உமது இரட்சகரால் நிறைவேற்றப்பட்ட தண்டனை இத்தகையதாகவே இருந்தது. உண்மையில், அவருடைய தண்டனை வலிமிகுந்தது, அழிவு உண்டாக்குவது.
[11:101] நாம் அவர்களுக்கு ஒரு போதும் அநீதமிழைக்க வில்லை; அவர்கள் தான் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்கு அநீதமிழைத்துக் கொண் டனர். உமது இரட்சகரின் தீர்ப்பு வந்த போது, கடவுள்-உடன் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்து விட முடியவில்லை. உண்மையில், அவை அவர் களுடைய அழிவையே நிச்சயப்படுத்தின.
[11:103] மறுவுலகின் தண்டனையை அஞ்சுவோருக்கு இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். அது மனிதர்கள் அனைவரும் ஒன்று கூட்டப்படும் ஒரு நாளாகும் - காணப்பட வேண்டிய ஒரு நாளாகும்.