Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:101 — ஹூ

நாம் அவர்களுக்கு ஒரு போதும் அநீதமிழைக்க வில்லை; அவர்கள் தான் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்கு அநீதமிழைத்துக் கொண் டனர். உமது இரட்சகரின் தீர்ப்பு வந்த போது, கடவுள்-உடன் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்து விட முடியவில்லை. உண்மையில், அவை அவர் களுடைய அழிவையே நிச்சயப்படுத்தின.

[11:100] இது நாம் உமக்கு விவரிக்கும் கடந்து போன சமூகங்களின் செய்தியாகும். சில இன்னும் உள்ளன, மேலும் சில மறைந்து போயின.

[11:102] அந்தச் சமூகங்கள் வரம்பு மீறியபோது உமது இரட்சகரால் நிறைவேற்றப்பட்ட தண்டனை இத்தகையதாகவே இருந்தது. உண்மையில், அவருடைய தண்டனை வலிமிகுந்தது, அழிவு உண்டாக்குவது.