குர்ஆன் 11:100 — ஹூ
இது நாம் உமக்கு விவரிக்கும் கடந்து போன சமூகங்களின் செய்தியாகும். சில இன்னும் உள்ளன, மேலும் சில மறைந்து போயின.
[11:99] அவர்கள் இவ்வுலகிலும் அது போலவே மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித் தலுக்குள்ளாகி விட்டனர்; பின்பற்றுவதற்கு எத்தகையதொரு துக்ககரமான பாதை!
[11:101] நாம் அவர்களுக்கு ஒரு போதும் அநீதமிழைக்க வில்லை; அவர்கள் தான் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்கு அநீதமிழைத்துக் கொண் டனர். உமது இரட்சகரின் தீர்ப்பு வந்த போது, கடவுள்-உடன் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்து விட முடியவில்லை. உண்மையில், அவை அவர் களுடைய அழிவையே நிச்சயப்படுத்தின.