குர்ஆன் 11:19 — ஹூ
அவர்கள் கடவுள்-ன் பாதையை விட்டும் தடுப்பதோடு அதனைக் கோணலாக்கவும் முயற்சி செய்கின்றனர், மேலும் அவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
[11:18] கடவுள்-ஐப் பற்றி பொய்களை இட்டுக் கட்டுபவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் கொண்டு வரப்படுவார்கள், மேலும் சாட்சிகள், “இவர்கள் தான் தங்கள் இரட்சகர் பற்றிப் பொய்யுரைத்தவர்கள். வரம்பு மீறியவர்கள் மீது கடவுள்-ன் தண்டனை ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.
[11:20] அவர்கள் ஒருபோதும் தப்பித்து விடமுடியாது, அன்றி கடவுள்-க்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யும் எந்த இரட்சகர்களையோ அல்லது எஜமானர்களையோ, அவர்கள் காணவும் மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை இரு மடங்காக்கப்படும். அவர்கள் செவியேற்கத் தவறி விட்டனர், மேலும் அவர்கள் பார்க்கவும் தவறிவிட்டனர்.