Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:18 — ஹூ

கடவுள்-ஐப் பற்றி பொய்களை இட்டுக் கட்டுபவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் கொண்டு வரப்படுவார்கள், மேலும் சாட்சிகள், “இவர்கள் தான் தங்கள் இரட்சகர் பற்றிப் பொய்யுரைத்தவர்கள். வரம்பு மீறியவர்கள் மீது கடவுள்-ன் தண்டனை ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.

[11:17] தங்கள் இரட்சகரிடமிருந்து உறுதியானசான்று* கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு சாட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டு, மேலும் இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் ஒரு முன் மாதிரியாகவும்,** ஒரு கருணையாகவும் அமைந்ததே, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள். பல்வேறு பிரிவினரிலுள்ள நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நரகம் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது. எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம்; இது உமது இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும், ஆனால் மக்களில் பெரும் பாலோர் நம்ப மறுக்கின்றனர்.

[11:19] அவர்கள் கடவுள்-ன் பாதையை விட்டும் தடுப்பதோடு அதனைக் கோணலாக்கவும் முயற்சி செய்கின்றனர், மேலும் அவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.