குர்ஆன் 11:17 — ஹூ
தங்கள் இரட்சகரிடமிருந்து உறுதியானசான்று* கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு சாட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டு, மேலும் இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் ஒரு முன் மாதிரியாகவும்,** ஒரு கருணையாகவும் அமைந்ததே, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள். பல்வேறு பிரிவினரிலுள்ள நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நரகம் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது. எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம்; இது உமது இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும், ஆனால் மக்களில் பெரும் பாலோர் நம்ப மறுக்கின்றனர்.
[11:16] அவர்கள் தான் தங்களுடைய மறுவுலகின் பங்கை விட்டு விட்டவர்கள், மேலும் அதன் விளைவாக, நரகமே அவர்களுடைய பங்காகும். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணேயாகும்; அவர்கள் செய்தவை அனைத்தும் பயனற்றதாகி விட்டது.
[11:18] கடவுள்-ஐப் பற்றி பொய்களை இட்டுக் கட்டுபவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் தங்களுடைய இரட்சகரின் முன் கொண்டு வரப்படுவார்கள், மேலும் சாட்சிகள், “இவர்கள் தான் தங்கள் இரட்சகர் பற்றிப் பொய்யுரைத்தவர்கள். வரம்பு மீறியவர்கள் மீது கடவுள்-ன் தண்டனை ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.