குர்ஆன் 11:16 — ஹூ
அவர்கள் தான் தங்களுடைய மறுவுலகின் பங்கை விட்டு விட்டவர்கள், மேலும் அதன் விளைவாக, நரகமே அவர்களுடைய பங்காகும். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணேயாகும்; அவர்கள் செய்தவை அனைத்தும் பயனற்றதாகி விட்டது.
[11:15] இவ்வுலக வாழ்வையும், அதன் ஆடம்பரப் பொருட்களையும் தேடுகின்றவர்களுக்கு, அவர்களுடைய செயல்களுக்குரிய கூலியை நாம் இவ்வாழ்வில் சிறிதளவும் குறைவின்றி அவர்களுக்குக் கொடுப்போம்.
[11:17] தங்கள் இரட்சகரிடமிருந்து உறுதியானசான்று* கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு சாட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டு, மேலும் இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் ஒரு முன் மாதிரியாகவும்,** ஒரு கருணையாகவும் அமைந்ததே, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள். பல்வேறு பிரிவினரிலுள்ள நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நரகம் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது. எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம்; இது உமது இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும், ஆனால் மக்களில் பெரும் பாலோர் நம்ப மறுக்கின்றனர்.