குர்ஆன் 11:2 — ஹூ
பிரகடனம் செய்கின்றது: “கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபட வேண்டாம். ஓர் எச்சரிப்பவராகவும், அவ்வண்ணமே நற்செய்தியை தாங்கியவராகவும் அவரிடமிருந்து நான் உங்களிடம் வருகின்றேன்.
[11:1] அ.ல.ர. இதன் வசனங்கள் பூரணப் படுத்தப்பட்டு பின்னர் விவரிக்கப்பட்ட* இது, ஒரு வேதமாகும். ஞானம் மிக்கவர், நன்கறிந்த வரிடமிருந்து இது வருகின்றது.
[11:3] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித் திருந்த வேண்டும். அப்போது அவர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, தாராள மாக உங்களுக்கு அருள்பாலிப்பார், மேலும் தன் கிருபையை, அதற்குத் தகுதியானவர்கள் மீது அருள்வார். நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் பயங்கரமான ஒரு நாளின் தண்டனை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.