குர்ஆன் 11:31 — ஹூ
“கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் சொந்த மாகக் கொண்டுள்ளேன் என்று நான் உரிமை கோரவில்லை, அன்றி எதிர்காலத்தையும் நான் அறிய மாட்டேன், அன்றி நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. அன்றி உங்களுடைய கண்களுக்கு இழிவானவர்கள் மீது, பாக்கி யங்கள் எதையும் கடவுள் அளிக்க மாட்டார் என்றும் நான் கூறவில்லை. அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களில் இருப்பது என்ன என்பதைக் கடவுள் மிக நன்றாக அறிவார் (இதனை நான் செய்திருந்தால்,) நான் ஒரு வரம்பு மீறியவர் ஆகியிருப்பேன்.”
[11:30] “என் சமூகத்தாரே, அவர்களை நான் வெளி யேற்றி விட்டால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் இயலும்? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
[11:32] அவர்கள், “நோவாவே, நீர் எங்களுடன் வாதம் செய்தீர், மேலும் தொடர்ந்து வாதித்துக் கொண்டே இருக்கின்றீர். நீர் உண்மையாளராக இருந்தால், எதனைக் கொண்டு எங்களை நீர் அச்சுறுத்துகின்றீரோ அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.