குர்ஆன் 11:30 — ஹூ
“என் சமூகத்தாரே, அவர்களை நான் வெளி யேற்றி விட்டால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் இயலும்? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
[11:29] “என் சமூகத்தாரே, உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்பதில்லை; என்னுடைய கூலி கடவுள் இடமிருந்தே வருகின்றது. நம்பிக்கை கொண்டவர்களை நான் வெளியேற்றுவதில்லை; அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப் பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்). அறிவில்லாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.
[11:31] “கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் சொந்த மாகக் கொண்டுள்ளேன் என்று நான் உரிமை கோரவில்லை, அன்றி எதிர்காலத்தையும் நான் அறிய மாட்டேன், அன்றி நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. அன்றி உங்களுடைய கண்களுக்கு இழிவானவர்கள் மீது, பாக்கி யங்கள் எதையும் கடவுள் அளிக்க மாட்டார் என்றும் நான் கூறவில்லை. அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களில் இருப்பது என்ன என்பதைக் கடவுள் மிக நன்றாக அறிவார் (இதனை நான் செய்திருந்தால்,) நான் ஒரு வரம்பு மீறியவர் ஆகியிருப்பேன்.”