Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:29 — ஹூ

“என் சமூகத்தாரே, உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்பதில்லை; என்னுடைய கூலி கடவுள் இடமிருந்தே வருகின்றது. நம்பிக்கை கொண்டவர்களை நான் வெளியேற்றுவதில்லை; அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப் பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்). அறிவில்லாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.

[11:28] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து ஓர் உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா? நீங்கள் அதனைக் காணமுடியாத போதிலும், தனது கருணை யிலிருந்து எனக்கு அவர் அருள்பாலித்திருந் தாலுமா? இதன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு நாங்கள் உங்களை நிர்பந்திக்கவா போகின்றோம்?

[11:30] “என் சமூகத்தாரே, அவர்களை நான் வெளி யேற்றி விட்டால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் இயலும்? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?