குர்ஆன் 11:28 — ஹூ
அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து ஓர் உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா? நீங்கள் அதனைக் காணமுடியாத போதிலும், தனது கருணை யிலிருந்து எனக்கு அவர் அருள்பாலித்திருந் தாலுமா? இதன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு நாங்கள் உங்களை நிர்பந்திக்கவா போகின்றோம்?
[11:27] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்ப மறுத்த தலைவர்கள் , “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை என்றே நாங்கள் காண்கின்றோம், மேலும் உம்மை முதலில் பின்பற்றும் மக்கள் எங்களில் மிக மோசமானவர்களாக இருப்பதையே நாங்கள் காண்கின்றோம். எங்களுக்கு மேலாக எந்த மேன்மையும் நீர் பெற்றிருக்கவில்லை என்பதையே நாங்கள் காண்கின்றோம். உண்மையில், நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்”என்று கூறினார்கள்.
[11:29] “என் சமூகத்தாரே, உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்பதில்லை; என்னுடைய கூலி கடவுள் இடமிருந்தே வருகின்றது. நம்பிக்கை கொண்டவர்களை நான் வெளியேற்றுவதில்லை; அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப் பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்). அறிவில்லாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.