Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:43 — ஹூ

அவன், “தண்ணீரில் இருந்து என்னைக் காத்துக் கொள்ள, ஒரு மலையின் உச்சியின் மீது நான் புகலிடம் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான். அவர் , “இன்றைய தினம் கடவுள்-ன் தீர்ப்பி லிருந்து எவரொருவரையும் எதுவும் காப்பாற்றி விடமுடியாது; அவருடைய கருணைக்குத் தகுதியானவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவர்)” என்று கூறினார். அலைகள் அவர்களைப் பிரித்தன, மேலும் அவன் மூழ்கடிக்கப் பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

[11:42] மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட தன்னுடைய மகனை : “என் மகனே, வந்து எங்களுடன் ஏறிக்கொள்; நம்ப மறுப்போருடன் இருக்காதே”என நோவா அழைத்தார்.

[11:44] “பூமியே, உனது தண்ணீரை விழுங்கி விடு,” மேலும் “வானமே, நிறுத்து” என்று பிரகடனம் செய்யப் பட்டது. அப்போது தண்ணீர் வற்றியது; தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் படகு *ஜுதி மலைகளில் தங்கியது. அப்போது: “வரம்பு மீறியவர்கள் அழிந்து போனார்கள்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.