குர்ஆன் 11:42 — ஹூ
மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட தன்னுடைய மகனை : “என் மகனே, வந்து எங்களுடன் ஏறிக்கொள்; நம்ப மறுப்போருடன் இருக்காதே”என நோவா அழைத்தார்.
[11:41] அவர், “வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும், நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்”என்று கூறினார்.
[11:43] அவன், “தண்ணீரில் இருந்து என்னைக் காத்துக் கொள்ள, ஒரு மலையின் உச்சியின் மீது நான் புகலிடம் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான். அவர் , “இன்றைய தினம் கடவுள்-ன் தீர்ப்பி லிருந்து எவரொருவரையும் எதுவும் காப்பாற்றி விடமுடியாது; அவருடைய கருணைக்குத் தகுதியானவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவர்)” என்று கூறினார். அலைகள் அவர்களைப் பிரித்தன, மேலும் அவன் மூழ்கடிக்கப் பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.