Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:41 — ஹூ

அவர், “வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும், நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்”என்று கூறினார்.

[11:40] நம்முடைய தீர்ப்பு வந்து, மேலும் சூழ்நிலைக் கொதித்தெழுந்தபோது, நாம் “ மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர, அதில் உம்முடைய குடும்பத்தாரோடு, ஒவ் வொரு வகையிலும்* ஒரு ஜோடியை ஏற்றிக் கொண்டு செல்வீராக. நம்பிக்கை கொண்டவர் களை உம்மோடு ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம், மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்கள் மிகச் சிலர் மட்டுமே.

[11:42] மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட தன்னுடைய மகனை : “என் மகனே, வந்து எங்களுடன் ஏறிக்கொள்; நம்ப மறுப்போருடன் இருக்காதே”என நோவா அழைத்தார்.