Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:45 — ஹூ

நோவா தன் இரட்சகரிடம்: “என்னுடைய இரட் சகரே, என்னுடைய மகன் என் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான், மேலும் உமது வாக் குறுதி சத்தியமானது. ஞானம் உடையோரில் எல்லாம் நீரே மிகுந்த ஞானம் உடையவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[11:44] “பூமியே, உனது தண்ணீரை விழுங்கி விடு,” மேலும் “வானமே, நிறுத்து” என்று பிரகடனம் செய்யப் பட்டது. அப்போது தண்ணீர் வற்றியது; தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் படகு *ஜுதி மலைகளில் தங்கியது. அப்போது: “வரம்பு மீறியவர்கள் அழிந்து போனார்கள்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.

[11:46] அவர், “நோவாவே, அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீர் அறியாத சிலவற்றை* என்னிடம் கேட்பது நன்னெறியல்ல. அறிவில்லாத வரைப் போல் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நான் உமக்கு விவரமாக விளக்கு கின்றேன்” என்று கூறினார்.