குர்ஆன் 11:46 — ஹூ
அவர், “நோவாவே, அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீர் அறியாத சிலவற்றை* என்னிடம் கேட்பது நன்னெறியல்ல. அறிவில்லாத வரைப் போல் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நான் உமக்கு விவரமாக விளக்கு கின்றேன்” என்று கூறினார்.
[11:45] நோவா தன் இரட்சகரிடம்: “என்னுடைய இரட் சகரே, என்னுடைய மகன் என் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான், மேலும் உமது வாக் குறுதி சத்தியமானது. ஞானம் உடையோரில் எல்லாம் நீரே மிகுந்த ஞானம் உடையவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[11:47] அவர், “என்னுடைய இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சாமலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என் மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந் தோருடனே இருப்பேன்” என்று கூறினார்.