Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:47 — ஹூ

அவர், “என்னுடைய இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சாமலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என் மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந் தோருடனே இருப்பேன்” என்று கூறினார்.

[11:46] அவர், “நோவாவே, அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீர் அறியாத சிலவற்றை* என்னிடம் கேட்பது நன்னெறியல்ல. அறிவில்லாத வரைப் போல் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நான் உமக்கு விவரமாக விளக்கு கின்றேன்” என்று கூறினார்.

[11:48] “நோவாவே, உம்மீதும், உம்முடனிருக்கும் தோழர்களின் சந்ததியிலிருந்து தோன்றும் தேசங்களின் மீதும் அமைதியுடனும் மேலும் அருட்கொடைகளுடனும் நீர் கரையிறங்கு வீராக. உங்கள் சந்ததியில் இருந்து தோன்றும் மற்ற தேசங்களைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு சிறிது காலம் அருள்பாலிப்போம், பின்னர் அவர்களை வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாக்குவோம்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.