குர்ஆன் 11:49 — ஹூ
இது, கடந்த காலத்தில் இருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தி ஆகும். இதற்கு முன்னர்-நீர் அவற்றைப் பற்றி எவ்வித அறிவும் பெற்றிருக்கவில்லை-நீரோ அல்லது உம்முடைய சமூகத்தாரோ. ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக. இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.
[11:48] “நோவாவே, உம்மீதும், உம்முடனிருக்கும் தோழர்களின் சந்ததியிலிருந்து தோன்றும் தேசங்களின் மீதும் அமைதியுடனும் மேலும் அருட்கொடைகளுடனும் நீர் கரையிறங்கு வீராக. உங்கள் சந்ததியில் இருந்து தோன்றும் மற்ற தேசங்களைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு சிறிது காலம் அருள்பாலிப்போம், பின்னர் அவர்களை வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாக்குவோம்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.
[11:50] ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. நீங்கள் கற்பனையே செய்கின்றீர்கள்.