Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:62 — ஹூ

قالوا يٰصٰلِحُ قَد كُنتَ فينا مَرجُوًّا قَبلَ هٰذا ۖ أَتَنهىٰنا أَن نَعبُدَ ما يَعبُدُ ءاباءوُنا وَإِنَّنا لَفى شَكٍّ مِمّا تَدعونا إِلَيهِ مُريبٍ

அவர்கள், “ஸாலிஹே, இதற்கு முன்னர் நீர் எங்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தீர். எங்களுடைய பெற்றோர்கள் எதை வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்களோ அதை வழிபடு வதை விட்டும் எங்களை நீர் தடுக்கின்றீரா? நீர் எங்களிடம் கூறிய ஒவ்வொன்றைக் குறித்தும் ஏராளமான சந்தேகங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

[11:61] தமூதுகளிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. அவர் உங்களை பூமியிலிருந்து துவக்கினார், பின்னர் அதிலேயே உங்களைக் குடியமர்த்தினார். அவருடைய மன்னிப்பை நீங்கள் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்த வேண்டும். என்னுடைய இரட்சகர் எப்பொழுதும் அருகிலிருப்பவர், பதிலளிப்பவர்” என்று கூறினார்.

[11:63] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றையும், மேலும் அவரிடமிருந்து கருணையையும் நான் பெற்றிருந்தாலுமா? நான் அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிப்பவர் யார்? நீங்கள் என்னுடைய நஷ்டத்தை மட்டுமே அதிகரிக்க இயலும்.