குர்ஆன் 11:61 — ஹூ
தமூதுகளிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. அவர் உங்களை பூமியிலிருந்து துவக்கினார், பின்னர் அதிலேயே உங்களைக் குடியமர்த்தினார். அவருடைய மன்னிப்பை நீங்கள் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்த வேண்டும். என்னுடைய இரட்சகர் எப்பொழுதும் அருகிலிருப்பவர், பதிலளிப்பவர்” என்று கூறினார்.
[11:60] அதன் விளைவாக, அவர்கள் இவ்வுலகிலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள். உண்மையில், ஆதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்தனர். உண்மையில், ஹூதின் சமூகத்தினராகிய ஆதுகள் அழிந்தனர்.
[11:62] அவர்கள், “ஸாலிஹே, இதற்கு முன்னர் நீர் எங்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தீர். எங்களுடைய பெற்றோர்கள் எதை வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்களோ அதை வழிபடு வதை விட்டும் எங்களை நீர் தடுக்கின்றீரா? நீர் எங்களிடம் கூறிய ஒவ்வொன்றைக் குறித்தும் ஏராளமான சந்தேகங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள்.