குர்ஆன் 11:60 — ஹூ
அதன் விளைவாக, அவர்கள் இவ்வுலகிலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள். உண்மையில், ஆதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்தனர். உண்மையில், ஹூதின் சமூகத்தினராகிய ஆதுகள் அழிந்தனர்.
[11:59] ஆதுகள் இப்படிப்பட்டவர்களே-அவர்கள் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்தனர், அவருடைய தூதர்களு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் ஒவ்வொரு பிடிவாதமிக்கக் கொடுங்கோலரின் வழிகளையும் பின்பற்றினர்.
[11:61] தமூதுகளிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. அவர் உங்களை பூமியிலிருந்து துவக்கினார், பின்னர் அதிலேயே உங்களைக் குடியமர்த்தினார். அவருடைய மன்னிப்பை நீங்கள் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்த வேண்டும். என்னுடைய இரட்சகர் எப்பொழுதும் அருகிலிருப்பவர், பதிலளிப்பவர்” என்று கூறினார்.