குர்ஆன் 11:86 — ஹூ
“நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் எதனை உங்களுக்கு வழங்குகின் றாரோ, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நான் உங்களுடைய பொறுப்பாளர் அல்ல.”
[11:85] “என்னுடைய சமூகத்தாரே, அளவையும், மற்றும் எடையையும் நீங்கள் நீதத்துடன், நிறைவாகக் கொடுக்க வேண்டும். மக்களை, அவர்களுடைய உரிமைகளில் மோசடி செய்யாதீர்கள், மேலும் நேர்மையற்றவர்களாக பூமியில் சுற்றித் திரியா தீர்கள்.
[11:87] அவர்கள், “ஷுஐபே, எங்கள் பெற்றோர்களின் மார்க்கத்தை நாங்கள் கைவிட்டு விட வேண்டு மென்றோ, அல்லது எங்களுடைய வியாபாரத்தை நாங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்ளக் கூடாதென்றோ, உமது மார்க்கம் உமக்குக் கட்டளையிடுகின்றதா? நிச்சயமாக, நீர் இரக்க முடையவர், ஞானம் மிக்கவர் என்று அறியப் பட்டவராக இருந்தீர்” என்று கூறினார்கள்.