Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:87 — ஹூ

அவர்கள், “ஷுஐபே, எங்கள் பெற்றோர்களின் மார்க்கத்தை நாங்கள் கைவிட்டு விட வேண்டு மென்றோ, அல்லது எங்களுடைய வியாபாரத்தை நாங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்ளக் கூடாதென்றோ, உமது மார்க்கம் உமக்குக் கட்டளையிடுகின்றதா? நிச்சயமாக, நீர் இரக்க முடையவர், ஞானம் மிக்கவர் என்று அறியப் பட்டவராக இருந்தீர்” என்று கூறினார்கள்.

[11:86] “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் எதனை உங்களுக்கு வழங்குகின் றாரோ, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நான் உங்களுடைய பொறுப்பாளர் அல்ல.”

[11:88] அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா; அவர் ஒரு மகத்தான பாக்கியத்தை எனக்கு வழங்கியிருந்தாலுமா? உங்களை எதனை விட்டும் நான் தடுக்கின் றேனோ அதனை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. என்னால் இயன்ற அளவு தவறுகளைச் சரி செய்யவே நான் விரும்புகின் றேன். எனது வழிகாட்டல் முற்றிலும் கடவுள்-ஐச் சார்ந்ததாகவே உள்ளது ; எனது பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவரிடமே நான் முற்றிலும் அடிபணிந்து விட்டேன்.