குர்ஆன் 11:88 — ஹூ
அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா; அவர் ஒரு மகத்தான பாக்கியத்தை எனக்கு வழங்கியிருந்தாலுமா? உங்களை எதனை விட்டும் நான் தடுக்கின் றேனோ அதனை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. என்னால் இயன்ற அளவு தவறுகளைச் சரி செய்யவே நான் விரும்புகின் றேன். எனது வழிகாட்டல் முற்றிலும் கடவுள்-ஐச் சார்ந்ததாகவே உள்ளது ; எனது பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவரிடமே நான் முற்றிலும் அடிபணிந்து விட்டேன்.
[11:87] அவர்கள், “ஷுஐபே, எங்கள் பெற்றோர்களின் மார்க்கத்தை நாங்கள் கைவிட்டு விட வேண்டு மென்றோ, அல்லது எங்களுடைய வியாபாரத்தை நாங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்ளக் கூடாதென்றோ, உமது மார்க்கம் உமக்குக் கட்டளையிடுகின்றதா? நிச்சயமாக, நீர் இரக்க முடையவர், ஞானம் மிக்கவர் என்று அறியப் பட்டவராக இருந்தீர்” என்று கூறினார்கள்.
[11:89] “ மேலும், என்னுடைய சமூகத்தாரே, என் மீது நீங்கள் கொண்டஎதிர்ப்பால், நோவாவின் சமூகத் தாருக்கோ, அல்லது ஹூதின் சமூகத்தாருக் கோ, அல்லது ஸாலிஹின் சமூகத்தாருக்கோ ஏற்பட்ட அதே நாசங்களுக்கு உள்ளாகும்படி தூண்டப்பட்டு விட வேண்டாம்; மேலும் லோத்தின் சமூகத்தார் உங்களுக்கு மிகவும் முந்தியவர்கள் அல்ல.