குர்ஆன் 11:89 — ஹூ
“ மேலும், என்னுடைய சமூகத்தாரே, என் மீது நீங்கள் கொண்டஎதிர்ப்பால், நோவாவின் சமூகத் தாருக்கோ, அல்லது ஹூதின் சமூகத்தாருக் கோ, அல்லது ஸாலிஹின் சமூகத்தாருக்கோ ஏற்பட்ட அதே நாசங்களுக்கு உள்ளாகும்படி தூண்டப்பட்டு விட வேண்டாம்; மேலும் லோத்தின் சமூகத்தார் உங்களுக்கு மிகவும் முந்தியவர்கள் அல்ல.
[11:88] அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என் இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றை நான் பெற்றிருந்தாலுமா; அவர் ஒரு மகத்தான பாக்கியத்தை எனக்கு வழங்கியிருந்தாலுமா? உங்களை எதனை விட்டும் நான் தடுக்கின் றேனோ அதனை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. என்னால் இயன்ற அளவு தவறுகளைச் சரி செய்யவே நான் விரும்புகின் றேன். எனது வழிகாட்டல் முற்றிலும் கடவுள்-ஐச் சார்ந்ததாகவே உள்ளது ; எனது பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவரிடமே நான் முற்றிலும் அடிபணிந்து விட்டேன்.
[11:90] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப் பிற்காக இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்தவேண்டும். என்னுடைய இரட்சகர் மிக்க கருணையாளர், கனிவானவர்.”