Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:111 — ஜோஸஃப்

அவர்களுடைய சரித்திரத்தில், அறிவுத்திறன் கொண்டோருக்கொரு படிப்பினை உள்ளது. இது இட்டுக்கட்டப்பட்ட “ ஹதீஸ்” அல்ல; (குர்ஆனா கிய) இது முந்திய அனைத்து வேதங்களையும் உறுதிப்படுத்துகின்றது, ஒவ்வொன்றிற்கும் உரிய விபரங்களை வழங்குகின்றது, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கொரு வழிகாட்டி யாகவும் மேலும் அருளாகவும் உள்ளது.

[12:110] தூதர்கள் நம்பிக்கையிழந்து, மேலும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் போது, மிகச்சரியாக நம்முடைய வெற்றி அவர்களிடம் வருகின்றது. பின்னர் நாம் தேர்ந்தெடுத்தோரை நாம் காப்பாற்றிக் கொள்வோம், அதே சமயம் குற்றவாளிகளான மக்களுக்கு நம்முடைய தண்டனை தவிர்க்க முடியாதது.