Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:110 — ஜோஸஃப்

தூதர்கள் நம்பிக்கையிழந்து, மேலும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் போது, மிகச்சரியாக நம்முடைய வெற்றி அவர்களிடம் வருகின்றது. பின்னர் நாம் தேர்ந்தெடுத்தோரை நாம் காப்பாற்றிக் கொள்வோம், அதே சமயம் குற்றவாளிகளான மக்களுக்கு நம்முடைய தண்டனை தவிர்க்க முடியாதது.

[12:109] பல்வேறு சமூகங்களில் உள்ள மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நாம் உள்ளுணர்வூட்டிய ஆண்களை அன்றி எவரையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. பூமியில் சுற்றி திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உண்டான விளைவுகளை அவர்கள் பார்க்க வில்லையா? நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு மறுவுலகின் வீடானது மிகவும் மேலானதாகும். இதன் பின்னராவது நீங்கள் புரிந்து கொள்வீர்களா?

[12:111] அவர்களுடைய சரித்திரத்தில், அறிவுத்திறன் கொண்டோருக்கொரு படிப்பினை உள்ளது. இது இட்டுக்கட்டப்பட்ட “ ஹதீஸ்” அல்ல; (குர்ஆனா கிய) இது முந்திய அனைத்து வேதங்களையும் உறுதிப்படுத்துகின்றது, ஒவ்வொன்றிற்கும் உரிய விபரங்களை வழங்குகின்றது, மேலும் நம்பிக்கை கொண்டோருக்கொரு வழிகாட்டி யாகவும் மேலும் அருளாகவும் உள்ளது.