குர்ஆன் 12:109 — ஜோஸஃப்
பல்வேறு சமூகங்களில் உள்ள மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நாம் உள்ளுணர்வூட்டிய ஆண்களை அன்றி எவரையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. பூமியில் சுற்றி திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உண்டான விளைவுகளை அவர்கள் பார்க்க வில்லையா? நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு மறுவுலகின் வீடானது மிகவும் மேலானதாகும். இதன் பின்னராவது நீங்கள் புரிந்து கொள்வீர்களா?
[12:108] “இதுவே எனது பாதையாகும் : தெளிவான தொரு சான்றின் அடிப்படையில், நான் உங்களைக் கடவுள்-ன் பால் அழைக்கின்றேன், மேலும் என்னை பின்பற்றுபவர்களும் அவ்வண்ணமே செய்கின்றனர். கடவுள் துதிப்பிற்குரியவர். நான் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஒருவரல்ல” என்று கூறுவீராக.
[12:110] தூதர்கள் நம்பிக்கையிழந்து, மேலும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் போது, மிகச்சரியாக நம்முடைய வெற்றி அவர்களிடம் வருகின்றது. பின்னர் நாம் தேர்ந்தெடுத்தோரை நாம் காப்பாற்றிக் கொள்வோம், அதே சமயம் குற்றவாளிகளான மக்களுக்கு நம்முடைய தண்டனை தவிர்க்க முடியாதது.