Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:108 — ஜோஸஃப்

“இதுவே எனது பாதையாகும் : தெளிவான தொரு சான்றின் அடிப்படையில், நான் உங்களைக் கடவுள்-ன் பால் அழைக்கின்றேன், மேலும் என்னை பின்பற்றுபவர்களும் அவ்வண்ணமே செய்கின்றனர். கடவுள் துதிப்பிற்குரியவர். நான் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஒருவரல்ல” என்று கூறுவீராக.

[12:107] திணற அடிக்கின்ற ஒரு தண்டனை கடவுள்-இடமிருந்து அவர்களைத் தாக்கிவிடாதென்றோ அல்லது அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அந்த நேரம் அவர்களிடம் திடீரென வந்து விடாதென்றோ, அவர்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?

[12:109] பல்வேறு சமூகங்களில் உள்ள மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நாம் உள்ளுணர்வூட்டிய ஆண்களை அன்றி எவரையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. பூமியில் சுற்றி திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உண்டான விளைவுகளை அவர்கள் பார்க்க வில்லையா? நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு மறுவுலகின் வீடானது மிகவும் மேலானதாகும். இதன் பின்னராவது நீங்கள் புரிந்து கொள்வீர்களா?