குர்ஆன் 12:107 — ஜோஸஃப்
திணற அடிக்கின்ற ஒரு தண்டனை கடவுள்-இடமிருந்து அவர்களைத் தாக்கிவிடாதென்றோ அல்லது அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அந்த நேரம் அவர்களிடம் திடீரென வந்து விடாதென்றோ, அவர்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?
[12:106] கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், இணைத்தெய்வ வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அதைச் செய்வதில்லை.
[12:108] “இதுவே எனது பாதையாகும் : தெளிவான தொரு சான்றின் அடிப்படையில், நான் உங்களைக் கடவுள்-ன் பால் அழைக்கின்றேன், மேலும் என்னை பின்பற்றுபவர்களும் அவ்வண்ணமே செய்கின்றனர். கடவுள் துதிப்பிற்குரியவர். நான் இணைத்தெய்வ வழிபாடு செய்யும் ஒருவரல்ல” என்று கூறுவீராக.