குர்ஆன் 12:22 — ஜோஸஃப்
அவர் தக்கவயதை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், அறிவையும் வழங்கி னோம். இவ்வாறே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி வழங்குகின்றோம்.
[12:21] எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவி யிடம், “இவரை நன்கு கவனித்துக் கொள். இவர் நமக்கு உதவி செய்யலாம், அல்லது இவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறாக ஜோஸஃபை நாம் பூமியில் நிலைநிறுத்தினோம், மேலும் கனவுகளின் விளக்கத்தை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். கடவுள்-ன் கட்டளை கள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறிய மாட்டார்கள்.
[12:23] அவர் வசித்து வந்த அவ்வீட்டின் பெண்மணி அவரைத் தவறான வழியில் செலுத்த முயன்றாள். கதவுகளை மூடிக் கொண்டு அவள், “நான் முழுமையாக உமக்குரியவள்” என்று கூறினாள். அவர், “கடவுள் என்னைக் காப்பாராக. அவர் தான் என் இரட்சகர், எனக்கொரு நல்ல இல்லத்தைத் தந்தவர்*. நிச்சயமாக வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்”என்று கூறினார்.