குர்ஆன் 12:21 — ஜோஸஃப்
எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவி யிடம், “இவரை நன்கு கவனித்துக் கொள். இவர் நமக்கு உதவி செய்யலாம், அல்லது இவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறாக ஜோஸஃபை நாம் பூமியில் நிலைநிறுத்தினோம், மேலும் கனவுகளின் விளக்கத்தை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். கடவுள்-ன் கட்டளை கள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறிய மாட்டார்கள்.
[12:20] அவர்கள் ஓர் அற்ப விலைக்கு-ஒரு சில திர்ஹங்கள்-அவரை விற்பனை செய்து விட்டனர். ஏனெனில் அவரிடம் அவர்களுக்கு தேவை எதுவும் இருக்கவில்லை.
[12:22] அவர் தக்கவயதை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், அறிவையும் வழங்கி னோம். இவ்வாறே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி வழங்குகின்றோம்.