Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:20 — ஜோஸஃப்

அவர்கள் ஓர் அற்ப விலைக்கு-ஒரு சில திர்ஹங்கள்-அவரை விற்பனை செய்து விட்டனர். ஏனெனில் அவரிடம் அவர்களுக்கு தேவை எதுவும் இருக்கவில்லை.

[12:19] ஒரு பிரயாணிகளின் கூட்டம் கடந்து சென்றது, உடனடியாக அவர்களுடைய தண்ணீர்ப் பிடிப்பவரை அனுப்பியது. அவர் தன் வாளியைக் கீழே விட்டார், அப்போது, “எப்படிப்பட்ட அதிர்ஷ்டம்! இங்கே ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று கூறினார். அவர்கள் அவரையும் ஒரு வியாபாரப் பொருளாகத் தங்களுடன் சேர்த்து எடுத்துச் சென்றனர், கடவுள் அவர்கள் செய்ததை முற்றிலும் அறிந்தவராக இருந்தார்.

[12:21] எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவி யிடம், “இவரை நன்கு கவனித்துக் கொள். இவர் நமக்கு உதவி செய்யலாம், அல்லது இவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறாக ஜோஸஃபை நாம் பூமியில் நிலைநிறுத்தினோம், மேலும் கனவுகளின் விளக்கத்தை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். கடவுள்-ன் கட்டளை கள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறிய மாட்டார்கள்.