குர்ஆன் 12:19 — ஜோஸஃப்
ஒரு பிரயாணிகளின் கூட்டம் கடந்து சென்றது, உடனடியாக அவர்களுடைய தண்ணீர்ப் பிடிப்பவரை அனுப்பியது. அவர் தன் வாளியைக் கீழே விட்டார், அப்போது, “எப்படிப்பட்ட அதிர்ஷ்டம்! இங்கே ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று கூறினார். அவர்கள் அவரையும் ஒரு வியாபாரப் பொருளாகத் தங்களுடன் சேர்த்து எடுத்துச் சென்றனர், கடவுள் அவர்கள் செய்ததை முற்றிலும் அறிந்தவராக இருந்தார்.
[12:18] போலி இரத்தத்துடன் அவருடைய சட்டையை அவர்கள் காட்டினார்கள். அவர் “உண்மையில், ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை செய்ய நீங்கள் ஒருவரோடொருவர் சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். நான் செய்யக்கூடிய தெல்லாம், அமைதியானதொரு பொறுமை யைக் கைக்கொள்வதுதான். உங்கள் இரகசியத் திட்டத்திற்கெதிராகக் கடவுள் எனக்கு உதவி செய்வாராக” என்று கூறினார்.
[12:20] அவர்கள் ஓர் அற்ப விலைக்கு-ஒரு சில திர்ஹங்கள்-அவரை விற்பனை செய்து விட்டனர். ஏனெனில் அவரிடம் அவர்களுக்கு தேவை எதுவும் இருக்கவில்லை.