குர்ஆன் 12:24 — ஜோஸஃப்
அவள் ஏறத்தாழ அவருக்கு இணங்கிவிட்டாள், மேலும் அவரும் ஏறத்தாழ அவளுக்கு இணங்கி விட்டார், தன் இரட்சகரிடமிருந்து ஒரு சான்றினைக் கண்டிரா விட்டால். இவ்விதமாக நாம் தீமையையும், பாவத்தையும் அவரை விட்டுத் திருப்பி விட்டோம், ஏனெனில் அவர் அர்ப்பணித்துக் கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார்.
[12:23] அவர் வசித்து வந்த அவ்வீட்டின் பெண்மணி அவரைத் தவறான வழியில் செலுத்த முயன்றாள். கதவுகளை மூடிக் கொண்டு அவள், “நான் முழுமையாக உமக்குரியவள்” என்று கூறினாள். அவர், “கடவுள் என்னைக் காப்பாராக. அவர் தான் என் இரட்சகர், எனக்கொரு நல்ல இல்லத்தைத் தந்தவர்*. நிச்சயமாக வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்”என்று கூறினார்.
[12:25] அவர்கள் இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர், இந்நிகழ்வின் போது, அவள் அவருடைய ஆடையைப் பின்புறத்திலிருந்து கிழித்து விட்டாள். வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் கண்டனர். அவள், “உமது மனைவியைக் கெடுக்க விரும்பிய ஒருவனுக் குரிய தண்டனை, சிறைப்படுத்தப் படுவது, அல்லது வலி மிகுந்ததொரு தண்டனை தவிர வேறென்னவாக இருக்க இயலும்?” என்று கூறினாள்.