Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:25 — ஜோஸஃப்

அவர்கள் இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர், இந்நிகழ்வின் போது, அவள் அவருடைய ஆடையைப் பின்புறத்திலிருந்து கிழித்து விட்டாள். வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் கண்டனர். அவள், “உமது மனைவியைக் கெடுக்க விரும்பிய ஒருவனுக் குரிய தண்டனை, சிறைப்படுத்தப் படுவது, அல்லது வலி மிகுந்ததொரு தண்டனை தவிர வேறென்னவாக இருக்க இயலும்?” என்று கூறினாள்.

[12:24] அவள் ஏறத்தாழ அவருக்கு இணங்கிவிட்டாள், மேலும் அவரும் ஏறத்தாழ அவளுக்கு இணங்கி விட்டார், தன் இரட்சகரிடமிருந்து ஒரு சான்றினைக் கண்டிரா விட்டால். இவ்விதமாக நாம் தீமையையும், பாவத்தையும் அவரை விட்டுத் திருப்பி விட்டோம், ஏனெனில் அவர் அர்ப்பணித்துக் கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார்.

[12:26] அவர், “அவள் தான் என்னை தவறான வழியில் செலுத்தமுயன்றவள்” என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்த ஒரு சாட்சி யோசனை கூறினார்: “அவருடைய ஆடை முன்புறமாகக் கிழிந்திருந்தால், அப்போது அவள் உண்மையைக் கூறுகின்றாள், மேலும் அவர் ஒரு பொய்யராக இருக்கின்றார்.