Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:37 — ஜோஸஃப்

அவர் கூறினார், “உங்களுக்கு ஏதேனும் உணவு வழங்கப்படுமாயின், அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அதனைப் பற்றி உங்களுக்கு அறிவிக்க என்னால் இயலும். இது என் இரட்சகர் என் மீது அருள் செய்த அறிவில் சில ஆகும். கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் கைவிட்டு விட்டேன், மேலும் மறுவுலகைக் குறித்து, உண்மையில் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்கின்றனர்.”

[12:36] இரு இளைஞர்கள் அவருடன் சிறையில் இருந்தனர். அவர்களில் ஒருவன், “நான் மது ரசம் தயாரிப்பதாக (என் கனவில்) கண்டேன் ” என்று கூறினான் மேலும் மற்றொருவன், “என் தலையில் நானே ரொட்டியைச் சுமந்து செல்வதாகவும், அதிலிருந்து பறவைகள் உண்டு கொண்டிருக்கவும் நான் கண்டேன். இந்தக் கனவுகளின் விளக்கத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிப்பீராக. நீர் நன்னெறி யாளராக இருப்பதை நாங்கள் காண்கின் றோம்”என்று கூறினான்.

[12:38] “மேலும் நான் அதற்கு மாறாக, எனது முன்னோர்களான ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்று கின்றேன். கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்வதில்லை. எங்கள் மீதும், மேலும் மனிதர்கள் மீதும் கடவுள் இடமிருந்துள்ள அருட்கொடை இத்தகைய தேயாகும், ஆனால் மனிதர்களில் பெரும் பாலோர் நன்றியற்றவர்களாக இருக்கின்றனர்.