குர்ஆன் 12:36 — ஜோஸஃப்
இரு இளைஞர்கள் அவருடன் சிறையில் இருந்தனர். அவர்களில் ஒருவன், “நான் மது ரசம் தயாரிப்பதாக (என் கனவில்) கண்டேன் ” என்று கூறினான் மேலும் மற்றொருவன், “என் தலையில் நானே ரொட்டியைச் சுமந்து செல்வதாகவும், அதிலிருந்து பறவைகள் உண்டு கொண்டிருக்கவும் நான் கண்டேன். இந்தக் கனவுகளின் விளக்கத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிப்பீராக. நீர் நன்னெறி யாளராக இருப்பதை நாங்கள் காண்கின் றோம்”என்று கூறினான்.
[12:35] பின்னாளில், தெளிவான சான்றுகளாக, அதனை அவர்கள் கண்டபோதிலும், அவரை அவர்கள் சிறிது காலம் சிறையிலிட்டனர்.
[12:37] அவர் கூறினார், “உங்களுக்கு ஏதேனும் உணவு வழங்கப்படுமாயின், அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அதனைப் பற்றி உங்களுக்கு அறிவிக்க என்னால் இயலும். இது என் இரட்சகர் என் மீது அருள் செய்த அறிவில் சில ஆகும். கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் கைவிட்டு விட்டேன், மேலும் மறுவுலகைக் குறித்து, உண்மையில் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்கின்றனர்.”