குர்ஆன் 12:35 — ஜோஸஃப்
பின்னாளில், தெளிவான சான்றுகளாக, அதனை அவர்கள் கண்டபோதிலும், அவரை அவர்கள் சிறிது காலம் சிறையிலிட்டனர்.
[12:34] அவருடைய இரட்சகர் அவருடைய பிரார்த் தனைக்குப் பதிலளித்தார், மேலும் அவர் களுடைய சூழ்ச்சியை அவரை விட்டுத் திருப்பி விட்டார். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[12:36] இரு இளைஞர்கள் அவருடன் சிறையில் இருந்தனர். அவர்களில் ஒருவன், “நான் மது ரசம் தயாரிப்பதாக (என் கனவில்) கண்டேன் ” என்று கூறினான் மேலும் மற்றொருவன், “என் தலையில் நானே ரொட்டியைச் சுமந்து செல்வதாகவும், அதிலிருந்து பறவைகள் உண்டு கொண்டிருக்கவும் நான் கண்டேன். இந்தக் கனவுகளின் விளக்கத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிப்பீராக. நீர் நன்னெறி யாளராக இருப்பதை நாங்கள் காண்கின் றோம்”என்று கூறினான்.