Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:41 — ஜோஸஃப்

“என் சிறைத் தோழர்களே, உங்களில் ஒருவன் தன் எஜமானுக்கு மது பரிமாறுவான், அதே சமயம் மற்றொருவன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவான்-அவன் தலையிலிருந்து பறவைகள் உண்ணும். இத்துடன் நீங்கள் விசாரித்தது பற்றிய விஷயம் முடிவடை கின்றது.”

[12:40] “அவருடன் நீங்கள் வழிபடுபவை, நீங்களும் உங்கள் பெற்றோர்களும் உருவாக்கிக் கொண்ட புதுமைகளேயன்றி வேறில்லை. இத் தகைய இணைத் தெய்வங்களுக்கு கடவுள் ஒரு போதும் அதிகாரம் அளித்திடவில்லை. கட்டளைகள் அனைத்தும் கடவுள்-க்கு உரிய வை, மேலும் அவரை அன்றி நீங்கள் வழிபடக் கூடாதென அவர் கட்டளையிடுகின்றார். இதுவே பூரணமான மார்க்கம், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

[12:42] காப்பாற்றப்பட இருந்தவரிடம் அவர் பின்னர், “உனது எஜமானரிடம் என்னை நினைவு கூர்வீராக”* என்று கூறினார். இவ்விதம் சாத்தான் அவரை அவருடைய இரட்சகரை மறக்கும்படிச் செய்தான், மேலும் , அதன் விளைவாக, இன்னும் சில வருடங்கள் அவர் சிறையில் தொடர்ந்து நீடித்திருந்தார்.